• முகப்பு
  • other
  • மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் குறைந்த அளவு பயின்று வருகின்றனர் இதற்கு நுழைவுத்தேர்வு எழுதாதே காரணம் - துணைவேந்தர்

மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் குறைந்த அளவு பயின்று வருகின்றனர் இதற்கு நுழைவுத்தேர்வு எழுதாதே காரணம் - துணைவேந்தர்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரியில் 36 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது.. நாடு முழுவதும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நாற்பத்தி எட்டு மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது எதற்காக என்றால் நாடு முழுவதும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் சென்று படிக்கலாம் என்கின்ற நிலையை உருவாக்குவதே இந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் நோக்கமாகும். நான் துணை வேந்தராக பொறுப்பேற்ற பின்னர் மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்கின்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளேன் இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலை அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமென யுஜிசி பரிந்துரைக்கவில்லை. ஆனால் 48 பல்கலைக்கழகங்கள் கட்டாயமாக நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான கல்வித்திட்டங்கள் இருப்பதால் அதனை ஒருநிலைப்படுத்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் வருகை தருவதன் நோக்கம் தேசிய கல்விக் கொள்கை குறித்து எதை பின்பற்றலாம், எதை பின்பற்றக் கூடாது என்பதை தெளிவாக விளக்கம் அளிப்பதற்காக 27 ம் தேதி வருகை தருகிறார். 28ம் தேதி மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ்சர்க்கார் வருகை தர இருக்கிறார். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துணைவேந்தர்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விக்கூடங்கள் செயல்படாத நிலையில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை போக்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும். செல்போன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்தில் 30 சதவிகித தமிழ் மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர் . இது வருத்தப்பட வேண்டிய விஷயம். நுழைவுத்தேர்வு எழுதாதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார். திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended