- முகப்பு
- மாவட்டச் செய்தி
- டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்.
இளவரசன்
UPDATED: Sep 27, 2023, 3:03:47 PM
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக சிஐடியு மாவட்ட சுமை பணி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் குடோனில் பணியாற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்கிட வேண்டும்.
மேலும் டாஸ்மார்க் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனசை உடனடியாக வழங்க வேண்டும்,
தமிழக முழுவதும் ஏற்றுகூலி ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.