• முகப்பு
  • district
  • கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை முறையாக வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை முறையாக வழங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தையும் நிலுவைத் தொகையையும், மேலும் தூய்மை காவலர்களுக்கு துப்புரவு ஊழியர்களுக்கு மாதாமாதம் தாமதமின்றி ஊதியத்தை நிலுவை இல்லாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் பத்தாயிரம் ரூபாயும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை 15 ஆயிரத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு சம்பளத்தை நேரடியாக ஊராட்சிகள் மூலம் வழங்கிட வேண்டும். நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 21,000 ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் முற்றுகைப் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயற்சித்தனர் அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended