• முகப்பு
  • பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எ

பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எ

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் இறைச்சிக் கடைகளில் உள்ள இறைச்சிக் கழிவுகள் பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசடைவதுடன் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கழிவுகளை முறையாக கையாளுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இறைச்சி கடைக்காரரிடம் இறைச்சிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை நகரமன்ற தலைவர் சுப்பராயலு வழங்கினார். இறைச்சிக் கழிவுகளை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்படும் என்றும், நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே இறைச்சி கழிவுகளை அளிக்க வேண்டும். மீறி பொது இடங்களிலோ அல்லது நீர் நிலைகளிலோ இறைச்சி கழிவுகளை கொட்டும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இறைச்சிக் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி நகர் பகுதியைச் சேர்ந்த கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,kallakurichi news,District News

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended