• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் எரிவதில்லை.நகராட்சி ஊழியர்கள் மெத்தனம்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் எரிவதில்லை.நகராட்சி ஊழியர்கள் மெத்தனம்.

குமரவேல்

UPDATED: May 25, 2023, 7:01:41 AM

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு செல்வவினாயகர் கோயில் தெருவில் உள்ள மின்விளக்கு மின் ஒயர் கட் ஆகி பல நாட்களாக எரியவில்லை.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை.அதே போன்று நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எதிரிலும் எரிவதில்லை.

பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதால் இரவு நேரங்களில் இருட்டாக உள்ளது. உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என நான் உள்பட சமூக ஆர்வலர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை.

மேலும் நகராட்சி அலுவலர்கள் எங்களிடம் ஆட்கள் இல்லை, மின் இணைப்பு தொடர்பாக சென்னையில் டெண்டர் விடப்பட்டு விட்டது. இனி சென்னையில் இருந்து தான் மின் ஒயர் இணைப்பிற்கு ஆட்கள் வரவேண்டும் என்பது போன்ற பொறுப்பற்ற பதில்தான் சொல்கின்றனர்.

ஒரே ஒரு மான்ஸ்டர் இணைப்பிற்கு சென்னையில் இருந்து ஆண்களா? ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதே பதிலை நகராட்சி அலுவலர்கள் கடந்த மூன்று மாதமாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற நிலை மற்ற வார்டுகளிலும் உள்ளது வார்டு கவுன்சிலர்கள் செலவு செய்து லைட் மாற்ற முன் வந்தாலும் நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை அதுவரை தெருவிளக்கு எரியாமல் இருட்டில்தான் பொது மக்கள் செல்லவேண்டுமா???

தெருவிளக்கில் அறுந்து போன ஒயரை சரி செய்ய முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா? இவ்வாறு வார்டு கவுன்சிலர் புனிதவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் நிர்வாக அலுவலகத்தை பலமுறை தொடர்பு கொண்டோம் யாரும் ஃபோன் எடுக்கவே மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்குமா?என பொருத்திருந்து பார்ப்போம்!

VIDEOS

RELATED NEWS

Recommended