• முகப்பு
  • district
  • ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதி இல்லை எனவும், விதி முறைகளை மீறுவோர்மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாவட்டகாவல் கண் காணிப்பாளர்  பாலாஜிசரவணன்  தெரிவித்து உள்ளார். நாளை ( 22. 05. 2022 ) ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப்போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவுதினம் அனுசரிக்கப் படுகிறது. தூத்துக் குடி மாவட்டத்தில் உட் கோட்டங்களில் காவல்துணை கண் காணிப்பாளர்கள் அவர்களின் 30 ( 2 ) ( Police Act ) காவல்சட்டம் நடை முறையில் உள்ளதால் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதி இல்லை. இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாவட்டத்தில் வசவப்ப புரம், செய்துங்க நல்லூர், பெரிய தாழை, சங்கரன் குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப் பட்டி, தொட்டிலோவன் பட்டி, பருத்திக் குளம், சென்னம ரெட்டியா பட்டி மற்றும் சவலாப் பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகனசோதனை மேற் கொள்ளப் பட்டு வருகிறது.  மேலும் சமூகவிரோத செயல்களில் ஈடு படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன்  தெரிவித்து உள்ளார். இதனை முன்னிட்டு ஐந்து காவல் கண் காணிப்பாளர் தலைமையில் ஒன்பது காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், பதினெட்டு காவல்துணை கண்காணிப்பாளர்கள், முப்பத்தேழு காவல்ஆய்வாளர்கள் உட்பட சுமார்  2500 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended