ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்

Kanishka

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பாடல் :3.) அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ விளக்கம் :- இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

VIDEOS

RELATED NEWS

Recommended