• முகப்பு
  • ஆன்மீகம்
  • பாபநாசம் அக்கரைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம் திருவிழா

பாபநாசம் அக்கரைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம் திருவிழா

ஆர்.தீனதயாளன் 

UPDATED: May 22, 2023, 10:15:19 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பால்குடம், சக்தி கரகம் , காவடி எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க வீதி உலாவளம் வந்து கோவிலை வந்தடைந்தது.

பின்பு அம்மனுக்கு தீபாராதனை பால்அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள்பாளித்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended