• முகப்பு
  • ஶ்ரீ மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீ காமேஸ்வரி சமேத ஶ்ரீ காமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் ??

ஶ்ரீ மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீ காமேஸ்வரி சமேத ஶ்ரீ காமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் ??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஶ்ரீ மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீ காமேஸ்வரி சமேத ஶ்ரீ காமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் இன்று நடைப்பெற்றது.... திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் தென்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி சமேத ஶ்ரீ தாண்டேஷ்வரர் ஶ்ரீ பெரியாச்சியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ காமேஸ்வரி சமேத ஶ்ரீ காமேஸ்வரனுக்கு ஶ்ரீ மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் இன்று தென்குடி ஶ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் சேவாடிரஸ்ட் மற்றும் ஶ்ரீ அங்காளி சித்தர் அப்பு வர்மா சுவாமிகள் மற்றும் ஶ்ரீ காயத்ரி அப்புவர்மா சுவாமிகள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் ஶ்ரீ காமேஸ்வரிக்கும் சமேத ஶ்ரீ காமேஸ்வரனுக்கும் மாலை மாற்றி திருமணம் வைபவம் நிகழ்வு நடைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டினர். இத்திருக்கல்யாணத்தில் ஏராளமான திருமணம் ஆன தம்பதிகள் கலந்துக் கொண்டு கணவன் மனைவி இருவரும் மாலையை மாற்றிக் கொண்டனர். மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் பொது மக்கள் கலந்துக் கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுகளித்து சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended