திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சிறப்பு மருத்து முகாம்.

L.குமார்

UPDATED: May 27, 2023, 8:07:33 AM

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மஞ்சஞ்கரணை வெல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதிய அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பழவேற்காடு அடுத்த கோட்டைக் குப்பம் ஊராட்சி,நடுவூர் மாதா குப்பம் புனித மகிமை மாதா ஆலய வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை முதலமைச்சரின் நிறுவன மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள மீனவ பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகள்,

ரத்தப் பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, உயர்கருவி மூலம் கண் பரிசோதனைகள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் காய்ச்சல்,தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பொது மருத்துவமும் நடைபெற்றது. இந்த முகாமினை புனித மகிமை மாதா திருத்தல அதிபர் காபிரியேல் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

புதிய அறம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் விக்டர் அருள்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் உயர்ரக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இம்முகாமில் கலந்து கொண்டு வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அனைத்துவித பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முகாமினை வெல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் குமுதா லிங்குராஜ், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் தேவ் ஆகியோர் ஆலோசனையின் படி மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி, முகாம் திட்ட மேலாளர் ஜானகிராமன், டாக்டர் வசந்தகுமார், டாக்டர் புவனேஸ்வரி,கண் மருத்துவர் பவித்ரா பவித்ரா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இந்த முகாமில்  புதிய அறம் அறக்கட்டளை பொருளாளர் முனீஸ்வரி,முதன்மை செயலர் சுரேகா மற்றும் காமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended