Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் , நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து, விவாதிப்பதற்கான தேசிய பஞ்சாயாத்து ராஜ் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். உடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடன் உள்ளார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது… தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தினையொட்டி நடைபெறும் கிராம சபா கூட்டத்தின் நோக்கமானது, கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு மக்களும் ,அவர்களின் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக விவாதித்து ஒரு தீர்வினை எட்டுகின்ற நிலையினை உருவாக்குவதற்காகவே. மேலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடைக்கின்ற வகையில் அமைந்துள்ளன. அந்தவகையில் மருத்துவ சார்ந்த திட்டங்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பயனாளிக்கின்ற வகையில் அமைந்துள்ளது. இதுபோன்று ஒவ்வொரு திட்டங்களும் மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று கிடைக்கின்ற வகையில் இருக்கின்றன. இக்கிராமசபா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு மக்களும் தங்களது ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவிக்க முழு பொறுப்பு உண்டு என்பதனை அனைவரும் உணர வேண்டும் பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இன்றையதினம் மாவட்ட முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபா கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்தும், தேவையான திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கையாக அனுப்பப்படுகிறது. இக்கிராம சபா கூட்டத்தின் கூட்டப்பொருளாக கிராம வளர்ச்சி, சுகாதாரம், தரமான குடிநீர், முறையான நீர் மேலாண்மை, மாற்று எரிசக்தியினை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலிவான பாதுகாப்பான வீடுகள் வழங்குதல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சமூக பாதுகாப்பு திட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் சேர்த்தல், ஊராட்சிகளில் நல் ஆளுமையுடன் அனைத்து நலத்திட்ட பணிகள் அனைத்து சேவைகளும் கிடைத்திட வழிவகை செய்தல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், ஊராட்சிகளில் நிலைத்த வளர்ச்சியினை ஏற்படுத்துதல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் பயனாளி பட்டியல் இறுதி செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான இடர்பாடுகளை சரிசெய்தல், ஊராட்சிகளில் தொழில் வளர்ச்சியினை உருவாக்குதல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இத்தீர்மானங்கள் தொடர்பாக ஊராட்சி பகுதி மக்களிடம் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை இக்கிராம சபை மூலம் எடுக்கப்படும் தற்பொழுது கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுப்பூசியினை செலுத்தி கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் செலுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்தெரிவித்தார். முன்னதாக, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலைத்த வளர்ச்சி குறித்த உறுதிமொழி கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, துணை இயக்குநர் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, திருவாரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் புலிவலம் தேவா, ஒன்றிய துணை பெருந்தலைவர் துரை தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி,பாஸ்கர், ஊராட்சி மன்றத்தலைவர் காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்றைய செய்திகள் திருவாரூர்,இன்றைய முக்கிய செய்திகள் திருவாரூர்,இன்றைய செய்திகள் திருவாரூர்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,thiruvarur news tamil,world news,thiruvarur news in tamil today,thiruvarur news today in tamil,Todays thiruvarur news,thiruvarur news today

Tags:

Comments & Conversations - 0