• முகப்பு
  • குற்றம்
  • இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு எஸ் பி பாலாஜி சரவணன் வேண்டுகோள் 14 வாகனங்கள் பறிமுதல் 70 ஆயிரம் ரூபாய் அபதாரம்.

இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு எஸ் பி பாலாஜி சரவணன் வேண்டுகோள் 14 வாகனங்கள் பறிமுதல் 70 ஆயிரம் ரூபாய் அபதாரம்.

மாரிமுத்து

UPDATED: May 10, 2023, 8:54:37 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்தப்பட்டு இருப்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு புகார் கூறப்பட்டது அடுத்து,

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுவதாக கூறப்பட்டதை எடுத்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள்,

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவல்துறையினர் புதன்கிழமை காலை தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிக ஒளி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு தென்பாகம் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார் அப்போது அப்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஓட்டுனர்களிடம் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இது போல இரு சக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சரை பொருத்தக் கூடாது,  இனிமேல் பொருத்தப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

இன்று பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் 5000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர் அகற்றப்பட்டு சத்தம் இல்லாத சைலன்ஸரை இரு சக்கர வாகனத்தில் பொருத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு வாகனத்திற்கு 5000 ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் அபதாரம்  விதித்துள்ளார்

இதுபோல தொடர்ந்து சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended