• முகப்பு
  • political
  • அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணைக்கு எதிராக திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை பின்பற்றுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணைக்கு எதிராக திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை பின்பற்றுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சொத்துக்கள் தொடர்பான பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை எழுதி கையொப்பமிட்டு பின்னர் பதிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும். சொத்துக்கள் வாங்கும்போது முத்திரைத்தாள் மதிப்பு சந்தை மதிப்பு விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை குறைக்க முத்திரைத்தாள் சட்டம் 47 (A) ன் கீழ் மனு செய்யலாம். இதற்கான குறைவு முத்திரைத்தாள் அலுவலகம் சென்னையில் இயங்கி வருகின்றது.சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முத்திரைத்தாள் குறைத்து மதிப்பீடு செய்ய வேண்டுமென்றால் சென்னையில் உள்ள அலுவலகத்தைதான் அணுக வேண்டியிருந்தது. நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொத்து வாங்குவதில் ஏற்படும் நடைமுறை சிக்கலை தீர்க்க சென்னையில் உள்ள தனித்துணை ஆட்சியர் முத்திரைத்தாள் அலுவலகத்திற்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அதிமுக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு தனித் துணை ஆட்சியர் முத்திரைத்தாள் அலுவலகம் காஞ்சிபுரத்தில் துவங்க அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலக கட்டிடத்தின் 2-வது மாடியில் தனித் துணை ஆட்சியர் முத்திரைத்தாள் அலுவலகம் துவங்கப்பட்டது. அலுவலகம் துவங்கி சுமார் 7 மாத காலமாகியும் சென்னை அலுவலகத்தில் இருந்து இதற்கான ஆவணங்களும் கோப்புகளும் காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு வராததால் இந்த அலுவலகம் எப்போதும் பூட்டியேபடியே உள்ளது. மேலும் இந்த அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவங்கியதால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், இந்த அலுவலகம் தற்போது பூட்டப்பட்டு நிலையில் உள்ளதால் குறைவு முத்திரைத்தாள் பிரச்சினை தொடர்பாக மீண்டும் சென்னைக்கே சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதிப்பு நிர்ணயம் செய்யும் பொருட்டு அதிகளவில் ஆவணங்கள் நிலுவையில் உள்ளதால், பொதுமக்கள் பதிவு செய்த ஆவணங்களைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்துவது அவசியமாகிறது. இதன் பொருட்டு காஞ்சிபுரத்தில் புதியதாக துவங்கப்பட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகத்தை எந்தவிதமான காரணம் கூறாமல் திமுக அரசாங்கம் உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலகம் கடந்த 2 வருடத்துக்கு முன்புதான் புதியதாக கட்டப்பட்டது. அலுவலகத்தில் உள்ள பல அறைகள் செயல்பாட்டுக்கு வராததால் அலுவலகத்தின் உள்ளேயே காய்கறிகள் , பழங்கள் போன்றவற்றை ஒரு சில தெரு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அலுவலகத்தின் உள்ளே பல அறைகள் பயன்பாட்டுக்கு வராமல் சுத்தப்படுத்த படாமல் மிகவும் அழுக்கடைந்து நிலையில் காணப்படுகின்றது. புதிய கட்டிடமே இந்த நிலையில் இருந்தால் பழைய கட்டடங்களின் நிலை என்னவாக இருக்கும் என சில அரசு அலுவலர்கள் கேள்வி கேட்கின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended