• முகப்பு
  • district
  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே ஆடுதுறை வீரசோழன் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பேரூராட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் – 2022ம் ஆண்டு சார்பாக, இலவசமாக 100 சதவிகித மானியத்தில் இரசாயன உரங்கள் வழங்கும் விழா அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் ரூபாய் 2 இலட்சத்து 46 ஆயிரத்து 600 மதிப்பிலான யூரியா (50கி), டிஏபி (50கி), பொட்டாஸ் (25கி) உள்ளிட்டவைகளை தலா ஒரு நபர் வீதம் மொத்தம் 100 நபர்களுக்கும் இடுபொருள்களை வழங்கினார். இவ்விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் ஆடுதுறை பேரூராட்சி செயலாளர் கோ.சி.இளங்கோவன், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுப்பு பொருட்களை வழங்கினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended