• முகப்பு
  • political
  • அதிமுக பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பதினாறு தீர்மானங்கள்.

அதிமுக பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பதினாறு தீர்மானங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1) அதிமுக அமைப்புதேர்தல்கள் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறுதல்.. 2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்க மத்தியஅரசை வலியுறுத்தல்.. 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்துசெய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும் பொதுசெயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவுஎடுத்தல்.. 4) அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.. 5) அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்யவேண்டுதல்.. 6) அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்புசெய்வது.. 7) அதிமுகவின் தற்போதையநிலை குறித்து விவாதித்து முடிவுஎடுத்தல்.. 8) மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுகஅரசின் வரலாற்று வெற்றிகளும். 9) அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்துசெய்யும் திமுகஅரசிற்கு கண்டனம்... 10) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள்விரோத திமுகஅரசுக்கு கண்டனம். 11) சட்டம்,ஒழுங்கை பேணிக்காக்க தவறிய திமுகஅரசுக்கு கண்டனம். 12) மேகதாது அணைகட்டும் முயற்சியை தடுத்துநிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியிறுத்தல். 13) இலங்கை தமிழர் நலன்காக்க மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்தல். 14) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகஅரசை வலியுறுத்தல். 15) நெசவாளர் துயர்துடைக்க மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்தல். 16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் திமுகஅரசுக்கு கண்டனம்.

VIDEOS

RELATED NEWS

Recommended