Author: THE GREAT INDIA NEWS

Category: political

கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் அரசு போக்குவரத்து கழக எதிரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு இளைஞரணி சார்பில் மூர்த்தி கலையரங்கத்தில் 320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. இதைப் பார்த்து மதவாத சக்திகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன். எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை. திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர் ஆனால் அதற்கு முன்பே மூத்த உறுப்பினர்களுக்கு ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்ல என்று தெரிவித்தார். தொடர்ந்து 320 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழ இந்நிகழ்ச்சியில் மாநிலங்கள் உறுப்பினர் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் துரை சந்திரசேகர் டிகேஜி நீலமேகம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம் ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் துணை மேயர் சு.ப தமிழழகன் இளைஞரிணி மாவட்ட அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி தஞ்சை மேயர் சன்.ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#kumbakonamnews #udhayanidhistalin #udhayanidhi #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0