• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • டி.என்.பி.சி தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பி.சி தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சுமி காந்த்

UPDATED: May 7, 2023, 2:42:58 PM

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் , தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் மையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 7.5.2023 காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது.

_________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்

https://youtu.be/tMZ7lg04cHQ

_________________________________________________

இந்நிலையில் காலையில் தேர்வு முடிந்து பின் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் நுழைய வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளே விட கோரி காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென நுழைவாயில் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் குறைவான பாதுகாப்பு பணியில் இருந்ததால் தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் வந்ததும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் டிஎஸ்பி தலைமையில் குவிக்கப்பட்டு தற்போது உள்ளே சென்ற மாணவர்களுடன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் தேர்வர்கள் ஐந்து நிமிடம் தாமதமாக அனுமதித்த நிலையில் தற்போது அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியை தேர்வர்கள் எழுப்பியதால் இந்த சர்ச்சை உருவானது.

VIDEOS

RELATED NEWS

Recommended