பள்ளிக்கல்வி துறை அதிர்ச்சித் தகவல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் திருமணவயதை எட்டுவதற்கு முன்பே கொரோனோகால கட்டத்தில் மாணவிகளுக்கு பெற்றோர் திருமணம்செய்து முடித்த அதிர்ச்சித்தகவல் பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கொரோனோவகுப்பு அவ்வாறு திருமணம்முடித்து இடை நின்ற 511 மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக் கல்வித் துறை மாணவிகளை பள்ளியில் சேர்த்து உள்ளது. கொரோனோ முதல்அலையின் தாக்கம்குறைந்த பின் முதற் கட்டமாக பள்ளிகள் திறக்கப் பட்ட போது ஏராளமானமாணவர்களும், மாணவிகளும். பள்ளிகளுக்கு நெடு நாட்கள் வராமல்இருப்பதை பள்ளிக் கல்வித் துறை கண்டறிந்தது.  இதனைத்தொடர்ந்து தமிழகம்முழுவதும் ஆசிரியர்கள்வாயிலாக இடைநின்ற மாணவர்களை மீண்டும்பள்ளிக்கு கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக களமிறங்கியது. அப்போது ஏராளமானமாணவர்கள் வேலைகளுக்கு செல்வதைகண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும்பள்ளிகளில் சேர்க்கப் பட்டனர்.  அதே போன்று மாணவிகளை பொருத்தவரை 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவித்தொடங்கி 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள்வரை பெற்றோர்கள் திருமண வகுப்புநடத்தி முடித்து உள்ளனர்.  அந்தவகையில் 511 மாணவிகளுக்கு திருமணம் முடிக்கப் பட்டு இருப்பதை கண்டறிந்து அந்த மாணவிகளை அரசுஅதிகாரிகளின் உதவியோடு மீண்டும்பள்ளிகளில் சேர்த்து உள்ளனர். தமிழகத்தில் நெடுநாட்களாகவே குழந்தைத்திருமணங்கள் நடை பெற்று வருகின்றன.  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன்காரணமாக அதிகளவு நடை பெற்று வந்த குழந்தை திருமணங்கள் குறைந்து இருந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில் எட்டாம்வகுப்பு முதல் மாணவிகளுக்கு திருமணம்நடத்தி வைக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  குறிப்பாக கொரோனோ கால கட்டத்தில் இத்தகைய குழந்தைதிருமணங்கள் அதிகளவு நடந்தேறி உள்ளது. 11 ஆம்வகுப்பு மாணவிகள் 417 பேரும், 12 ஆம்வகுப்பு மாணவிகள் 2 பேரும், 9 ஆம் வகுப்பு மாணவிகள் 37 பேரும், 10 ஆம் வகுப்பு மாணவிகள் 45 பேரும், 8 ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேரும் என 511பேரும் பெற்றோர்கள் நடத்தி முடித்து உள்ளனர்.  இந்த மாணவிகள் பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கையால் மீண்டும். பள்ளிகளில் சேர்க்கப் பட்டு அவர்களின் கல்வித்தொடர வழிவகை செய்யப் பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended