பள்ளிகளுக்கு மீண்டும் ஷிப்ட் முறையா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் கடந்தசில மாதங்களாக குறைந்துவந்த தொற்று தற்போதுமீண்டும் அதிகரித்துவருகின்றது. குறிப்பாக ஜூன்மாதத்தில் இருந்து தொற்றுப்பரவலினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய்பரவல் உச்சம்தொட்டு வருகின்றது. பொதுஇடங்கள் மற்றும் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் கட்டாயம்மாஸ்க் அணிய வேண்டுமென்று சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளனர். மாணவர்களின் நலனை கருதி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் தனியார்பள்ளிகளில் வகுப்பறையில் நெருக்கமாக அமர வேண்டியநிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு நாள்விட்டு ஒருநாள் அல்லது காலைமாலை என இரண்டுஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? எனதனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தவிர 10,11, 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவர்களை தவிர மற்றவகுப்பு மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பானதாக இருக்கும் என பள்ளிநிர்வாகிகள் யோசித்து உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஒருசில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துக்களைக்கேட்டு இதனை நடை முறைப் படுத்த முடிவு செய்யப் பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே விரைவில் ஷிப்டுமுறையில் வகுப்புகள் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கப் படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended