• முகப்பு
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த ஏழு ஆண்கள் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் க?

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த ஏழு ஆண்கள் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் க?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த வேணு என்பவரின் கட்டுப்பாட்டில் மண்ணூர் ஏரிக்கரை பகுதியில் சவுக்கு மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபட்டுவந்த மதுராந்தகம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், அவருடைய மனைவி சாந்தி, சஞ்சீவி, அவருடைய மனைவி சித்ரா, சங்கர், அவருடைய மனைவி சாந்தி, அவர்களுடைய 11 வயது ஆண் குழந்தை, மற்றும் சுப்பிரமணி, ராஜி, வந்தவாசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ஏழுமலை ஆகிய 11 கொத்தடிமைகளை மக்களுக்கான மறுவாழ்வு நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்தர் வட்டாட்சியர் விஜயகாந்த் ஆகியோர் தலைமையில் மீட்டனர் அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அவர்களுக்கு விடுதலைச் சான்று வழங்கி மறுவாழ்வுக்காக சொந்த கிராமத்திற்கு வருவாய்த் துறையினரால் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended