• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகளை கைவிடக் கோரி ஆலோசனைக் கூட்டம் தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்த முடிவு.

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகளை கைவிடக் கோரி ஆலோசனைக் கூட்டம் தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்த முடிவு.

முத்தையா

UPDATED: May 28, 2023, 6:45:00 PM

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழமை வாய்ந்தது இந்தப் பள்ளியில் சேந்தமங்கலம் வட்ட நீதிமன்ற வளாக கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில்,

இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை கைவிட கோரி இன்று தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்ரடர் பாலாஜி தலைமை தாங்கினார்.

இதில் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பள்ளி முதன்மை வாய்ந்த பள்ளி இந்தப் பள்ளியில் நீதிமன்றம் வளாகக் கட்டினால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் ஆகையினால் நீதிமன்ற வளாகத்தை கட்ட பள்ளி எல்லையை விட்டு வேறு இடத்தில் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தவறும் பட்சத்தில் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது ஆகையினால் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நீதிமன்ற வளாகத்தை வேறு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended