• முகப்பு
  • political
  • அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் சிறப்பு வழிபாடு.

அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் சிறப்பு வழிபாடு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமான நாகநாத சுவாமி கோயில் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோயில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதி செம்பியவரம்பல் சொர்ண பைரவர் கோவிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்து விரோதமாக பேசுவது, அதற்காக மோடியை எதிர்ப்பதை வழக்கமாக திமுக கொண்டுள்ளது. கிரிமினல் பாதிரியார் ஜகத் கஸ்பர்  திட்டமிட்டு மீண்டும் தேசத்தை பிரிப்பதற்கான பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையில் பேசுகிறார். கஸ்பர் மீது 2006ல் அவர் மீது ஆயுத கடத்தல் வழக்கு உள்ளது.  திமுக ஆட்சியில் இத்தகைய பயங்கரவாத, தேச விரோத செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது. அவர் மதம் வேடம் போட்டிருப்பது பொய்யானது. எனவே கஸ்பரை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரிவினையை உருவாக்கும் வகையில் தனி தமிழ்நாடு என  ஆ.ராசா பேசியிருப்பதை மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இல்லையெனில் முதல்வரின் கருத்தாகவே அது ஏற்றுக் கொள்ளப்படும். கடந்த 1991ல்  அப்போதைய பிரதமர் சந்திரசேகர் நேரடியாக எதற்காக கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை கலைத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆ.ராசா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தைரியம் இருந்தால், முதுகெலும்பு இருந்தால்  திமுக செயற்குழுவை உடனடியாக கூட்டி  தனி தமிழ்நாடு தீர்மானம் போடுங்கள். அப்புறம் என்ன நடக்கிறது என பார்ப்போம். கொட்டாவியா உயர்மட்டக்குழு கனடா அரசுடன் பேசியதோடு இந்து அமைப்புகள், கனடாவில் வாழும் இந்துக்கள் பேசியதன் மூலம் ஆவண பட இயக்குனர் லீனா மணிமேகலையின் மாகாளி  படத்தின் சர்ச்சை படம்  கனடாவில் நடக்கும் நிகழ்ச்சியில் வரக்கூடாது என  முடிவெடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அறநிலையத்துறையில் அறங்காவலர் நியமிப்பதில் அவசரம் காட்டியது போல் தற்போது பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் அவசரம் காட்டி பணம் பார்க்க திமுக அரசு  முயன்றது. ஊழலிலே பிறந்து ஊழலிலே வளர்ந்த கட்சி திமுக. தற்போது ஆசிரியர் நியமனத்தை நீதிமன்றம் கண்டித்துள்ளது. தமிழகத்தில் திமுக மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் நேரடியாக நான் கருத்து சொல்ல முடியாது. இருப்பினும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தனிப்பட்ட முறையில் அதிமுக தலைவர்களிடம்  இது குறித்து பேச முயற்சிப்பேன். தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்பதுதான் எங்கள் செயல்திட்டம். தற்போது முன்பை விட தமிழகத்தில்  நான்கு மடங்கு பாஜக வளர்ச்சி கண்டுள்ளது. நகராட்சி, உள்ளாட்சி தேர்தலில் அது வெளிப்படையாக தெரியவந்ததுள்ளது. தற்போது தமிழகத்தில் 12.5 சதவீதம் வளர்ச்சி என்பதை மேலும் மூன்று மடங்கு வளர்ச்சியாக்கினால்  போதும். அதற்கான பணிகளை தான் நாங்கள் செய்து வருகிறோம். மக்களிடத்தில் தேசபக்தியை மேம்படுத்தும் வகையில் 75ம் ஆண்டு சுதந்திர ஆண்டினை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  தியாகிகள், தலைவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக  மக்களிடத்தில் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் சதீஷ்குமார்,  நகர செயலாளர் வாசன் வெங்கட்ராமன், வேதம் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended