இந்திய நீச்சல் சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.

பிரவீன்

UPDATED: May 23, 2023, 6:17:57 AM

சென்னை: சவேரா ஹோட்டலில் நடந்த அகில இந்திய நீச்சல் சம்மேளன தேர்தலில்தலைவராக ஜெயப்பிரகாஷ் இரண்டாவது முறையாக ஒரு மனதாக தேர்ந்தேடுக்கப்பட்டார். 

குஜராத்தை சேர்ந்த மோனல் சோக்க்ஷி பொதுச் செயலாளராகவும், கோவாவை சேர்ந்த சுதேஷ்நக்வெங்கர் பொருளாராகவும் டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, அசாம், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ராஜ்குமார் அணில் வியாஸ் சதீஷ்குமார் பாஸ்கர் தாஸ் அணில் கார்த்தி ஆகியோர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அகில இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெயபிரகாஷ் செய்தியாளரிடம் வரும் காலங்களில் வாட்டர் போலோ, டைவிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு போட்டியாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தற்போது 30 நீச்சல் குளங்கள் உள்ளதாகவும் அதில் நான்கு சர்வதேச போட்டியாளர்கள் பயிற்சி பெறும் தரத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் தற்போது அனைத்து நீச்சல் குளங்களில் பயிற்சியாளர்களை நியமிக்க உள்ளதாக கூறினார்.

இந்தியா முழுவதும் 20000 நீச்சல் போட்டியாளர்கள் உள்ளதாகவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கு மேலாக உயர்த்த நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கடந்த காலங்களில் 11 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் பங்கேற்று பதக்கங்கள் வென்றதாக தெரிவித்தார்.

மத்திய அரசு நீச்சல் பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மேலும் மத்திய அரசிடம் இருந்து சலுகைகள் பெற முயற்சி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended