• முகப்பு
  • district
  • வேளாண்மை மற்றும் உழவர் சார்பாக விதை நெல் மற்றும் பயர் செய்யும் ஆலோசனைக் கூட்டம்.

வேளாண்மை மற்றும் உழவர் சார்பாக விதை நெல் மற்றும் பயர் செய்யும் ஆலோசனைக் கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் ஆத்மியா அலுவலகத்தில் இருந்து வேளாண்மை துறை சார்பாக ராஜா , வேளாண்மை இயக்குனர் ஆறுமுகம் , வேளாண்மை அலுவலர் உமாதேவி ,சுகந்தி, கால்நடை மருத்துவர் பிரியா ,சந்தியா , திருமுருகன் கால்நடை மருத்துவர் கூறுகையில் பசுவில் இருந்து சாணம் மற்றும் இளநீர் கலந்து குழியில் மூடவைத்து 21 நாள் பின் விவசாயத்திற்கு அடி உரமாக பயன்படுத்தினால் நெல் மற்றும் கரும்பு பருத்தி போன்ற விளைச்சல்கள் அதிக வருமானத்தை கொடுக்கும். அதே போன்று மாடுகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை கோமாரி ஊசி கண்டிப்பாக போடவும் , இல்லையெனில் ஒரு மாட்டிற்கு மடிக்கட்டி நோய் வந்தால் ஊரில் உள்ள அத்தனை மாடுகளையும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அதேபோன்று மடி வீக்கம் வராமல் தடுக்க ரசாயன கலந்த பருத்தி புண்ணாக்கு போன்ற எந்த உணவும் மாடுகளுக்கு வைக்கக்கூடாது, இதனால் மாடுகள் எளிதில் நோய் தாக்கம்அதிகரிக்கும். விவசாயிகளுக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் தென்னங்கன்று இலவசமாக வழங்கப்படுகிறது, உங்களது அடையாள அட்டையை காண்பித்து விட்டு வாங்கிச் செல்லலாம் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

RELATED NEWS

Recommended