Author: முத்தையா

Category: கல்வி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்து மாணவ மாணவிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டு நிகழ்ச்சி யில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் டாகடர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:- 

எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன கண்டுபிடிப்பு ஆய்வகத்தில்,  ஏ.ஆர் / வி.ஆர் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் லேப், ஸ்டெம் லேப் மற்றும் அடல் டிங்கரிங் லேப் மற்றும் 3டி தொழில்நுட்பம் போன்ற பல்வேறு நவீன அறிவியல் தொழில்நுட்பத்தில் எஸ்.பி.கே பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் வழங்கும் வகையில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவனும், அறிவியலில் ஆர்வமும், ஊக்கமும் பெறுவதற்கு இந்த ஆய்வகம் துணை செய்கிறது. 

இந்த ஆய்வகத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக நவீன ரோபோடிக்ஸ் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வகப்பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் தினசரி காலை, மாலை ஆய்வகத்திலேயே வந்து பயிற்சி பெறும் வகையில், அவர்களுக்கு உரிய புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் ஆய்வு பாடத் திட்டமானது வழக்கமான பள்ளி பாடத்திட்டத்திற்கும், பாடநூலுக்கும் தொடர்புடையதாக ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு கற்றல் கற்பித்தல் திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளி பாடங்களைப் படித்த பிறகு, அறிவியலில் ஆர்வம் உடைய மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், தங்களுடைய கற்பனை, சிந்தனை வளத்தை செயல்படுத்தி பார்க்கவும், அவர்களுக்கு துணை செய்து, உதவி செய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் இந்த ஆய்வகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை அம்சமாகும்.

அது மட்டுமன்றி, ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளி மூலமாக அல்லது பெற்றோர் மூலமாக ஏதேனும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருந்தால்,

மாநில மாவட்ட அளவிலான அல்லது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் கண்டுபிடிப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, வெற்றிபெற்று இருந்தால் அவர்களுக்கான பள்ளி கல்விக்கு,

எஸ்.பி.கே பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு படிப்பையும், அறிவியல் ஆராய்ச்சியும் ஒரே நேரத்தில் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகைய வாய்ப்புள்ள முதல் பள்ளியாக எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளி திருச்செங்கோட்டில் விளங்குகிறது. அந்தந்த பாடவேளை தவிர மற்ற நேரங்களில் மாணவர்கள் அறிவியல் “ஆய்வு செய்ய முடியவில்லை” என்ற குறையை போக்குவதற்கும்

“பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வசதி இல்லாத மாணவ, மாணவியர்கள் தங்களுடைய அறிவியல் ஆராய்ச்சி திறமையை கொண்டு, எஸ்.பி.கே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இது போன்ற பல்வேறு மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு அறிவியல் ஆய்வு போட்டிகளில், அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்கச் செய்து வருகிறது எஸ்.பி.கே பள்ளி என்பது அனைவரும் அறிந்ததே. 

எதிர்காலத்தில் அறிவியல் கல்வி என்பது பள்ளிப் பருவ மாணவர்களுக்கு வழங்கப்படும் பொழுது, வெறும் புத்தகப் படிப்பாக இல்லாமல், செய்து பார்த்து கற்றல் என்ற முறையில், ஆய்வு செய்து சிந்தித்தல் என்ற முறையில், நவீன வசதிகளை உள்ளடக்கி உருவாகக்கூடிய பள்ளிகளாக நாடு முழுவதும் பல்வேறு நவீன பள்ளிகள் வரப் போகின்றன. அதற்கு முதல்படியாக, திருச்செங்கோடு 

எஸ்.பி.கே பள்ளியில் இது போன்ற நவீன வசதியுடைய ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளுக்கான ஒரு தொழில்நுட்ப ஆய்வகம் இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலமாக மாணவர்கள் இளம் வயது முதலே சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிக்னல் விளக்குகள், இரு சக்கர, நான்கு சக்கர வண்டி ஓட்டும் முறைகள், அவற்றுக்கான சிக்னல்கள், சாலையில் நடந்து செல்லுதல் மற்றும் சைக்கிளில் செல்லுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் இங்கே கற்றுத் தரப்படுகிறது.

ஒரு மாணவனுடைய வாழ்க்கைக்கு தேவையான சாலை பாதுகாப்பு அறிவும் அதே மாணவனுடைய எதிர்கால கல்விக்கு தேவையான அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இப்பள்ளியில் அடிப்படையிலிருந்து கற்றுத் தரப்படுகிறது என்பது பாராட்டுக்குரியதாகும். எஸ்.பி.கே கல்வி அறக்கட்டளையின் சார்பாக 16 வகையான கல்வி உதவி தொகைகள் இப்பள்ளியில் வழங்கப்படுகின்றன.

உதாரணமாக விவசாயிகள், விபத்து அல்லது கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தவர்கள், விளையாட்டில் தலைசிறந்த மாவட்ட /மாநில/ அளவிலான வெற்றி பெற்றவர்கள், என்சிசி படை பிரிவில் சிறந்த பயிற்சி பெற்ற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இப்படி பல்வேறு விதமான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எஸ். பி.கே பள்ளியில் கல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வழங்கப்படுகிறது. 

எஸ்.பி.கே பள்ளியின் உடைய பல்வேறு வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த அறிவியல் ஆய்வு தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மாணவச் செல்வங்கள் தங்களுடைய அறிவியல் ஆர்வத்தை உண்டாக்கிக் கொள்ளவும் அதற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் எஸ் பி கே ஜெம்ஸ் பள்ளி உதவி செய்கிறது.

இவ்வாறு ஆய்வகத்தை திறந்து வைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் டாகடர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கும்  இஸ்ரோ முன்னாள் தலைவர் டாகடர் மயில்சாமி பேட்டி அளித்தார்.

அப்போது எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளின் நிறுவனர் தாளாளர் பி.செங்கோடன்,

எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளி சேர்மன் டாக்டர் ஏ.எஸ்.பிரபு உடனிருந்தார்.

விழா ஏற்பாடுகளை எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளி இயக்குநர், மெட்ரிக் பள்ளி முதல்வர் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர்களும் செய்திருந்தனர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #mayilsamyannadurai #namakkalnewslive , #namakkalnewstoday , #scientist #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0