தி கிரேட் இந்தியா நியூஸ் செய்தியின் எதிரொலியாக சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரமற்ற நிலையிலிருந்து பள்ளி சீரமைப்பு.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Sep 19, 2023, 12:04:23 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறை மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்து சுகாதாரமற்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் தி கிரேட் இந்தியா நியூஸ் செய்தியின்

 https://thegreatindianews.com/news/toilet-health-hazard-at-swamimalai-government-higher-secondary-school-near-papanasam

வாயிலாக அரசு மேல்நிலைப்பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை அறிந்த பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லா உடனடி ஆணைக்கிணங்க பள்ளி மேலாண்மை குழு தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாவட்ட மகளிர் அணி பொருளாளருமான ஷஃபானா புர்கான், மனிதநேய மக்கள் கட்சியின் பேரூர் செயலாளருமான அசாருதீன்,

மற்றும் பேரூர் தலைவர் புர்க்கான் ஆகியோர் பள்ளியில் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக பள்ளியை பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் உடனடியாக ஆணையிட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மற்றும் தி கிரேட் இந்தியா நியூஸ் பத்திரிக்கைக்கும் சுவாமிமலை பொதுமக்களும், பெற்றோர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended