- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேசிய நெடுஞ்சாலையில் யானைகளை பார்க்க வரும் பொதுமக்கள் ... வாகனங்களை நிறுத்தக் கூடாது என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேசிய நெடுஞ்சாலையில் யானைகளை பார்க்க வரும் பொதுமக்கள் ... வாகனங்களை நிறுத்தக் கூடாது என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 8, 2023, 2:32:31 PM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆசனூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறமும் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன.
யானைகள் அதிக அளவில் நடமாடக்கூடிய இந்தப் பகுதியில் மூங்கில் மரங்களை உண்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற ஐந்துக்கும் மேற்பட்ட யானைகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி சத்தமிட்டு தொந்தரவு செய்து புகைப்படங்கள் எடுத்தனர். இதனால் யானைகள் சாலை கடக்க முடியாமல் தவித்தன.
வாகனங்களின் ஒலியை எழுப்புவதாலும், கூக்குரல் இடுவதாலும் யானைகள் கோபமாகி, பொதுமக்களை தாக்கக்கூடும் என்ற காரணத்தால், எந்த வாகனமும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி, வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.