Author: THE GREAT INDIA NEWS

Category: political

ஜூலை 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 65 சதவீத மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பார்கள் என்றும், ஆனால் நடப்பாண்டில், நீட் தேர்வில் அதிக மாணவர்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக தமிழக அரசு, வழக்கமாக நடத்தும், இ பாக்ஸ் எனும் ஆன் லைன் பயிற்சி வகுப்பினை நடத்த வேண்டாம் என உத்தரவிட்டு நாடகம் நடத்தி வருதாக குற்றம்சாட்டியும், தமிழக ஆளுநர், அந்த பதவிக்குரிய கண்ணியத்துடனேயே தொடர்ந்து நடந்து வருகிறார் . இதுவரை அவர் தமிழக அரசு குறித்தோ, அரசில் உள்ள தனிப்பட்ட நபர்கள் குறித்தோ பேசியது இல்லை என்றும், ஆனால் சத்தியபிரமானம் எடுத்துக் கொண்ட தமிழக அமைச்சர்களும், திமுகவின் முக்கிய பிரமுகர்களும் தனிப்பட்ட முறையில் ஆளுநரை விமர்சித்து பேசுவது கண்டிக்கதக்கது என்றும் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் ! கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து பேசும்போது, சுவாமிவிவேகானந்தரை பெருமைப்படுத்தும் விதமாக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும், கடந்த 2017ம் ஆண்டு அப்போதை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்தப்படி, ரயில்வே அருங்காட்சியகத்தை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.l கர்ப்பிணி பெண்களுக்காண சத்துமாவு வழங்கும் திட்டத்தில் நடந்த டெண்டர் குளறுபடிகளுக்கு முன்னுக்கு பின் முரணாக தவறான தகவல் அளித்ததால் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன், தான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தமிழக ஆளுநர், அந்த பதவிக்குரிய கண்ணியத்துடனேயே தொடர்ந்து நடந்து வருகிறார் இதுவரை அவர் தமிழக அரசு குறித்தோ, அரசில் உள்ள தனிப்பட்ட நபர்கள் குறித்தோ பேசியது இல்லை என்றும், ஆனால் சத்தியபிரமானம் எடுத்துக் கொண்ட தமிழக அமைச்சர்களும், திமுகவின் முக்கிய பிரமுகர்களும் தனிப்பட்ட முறையில் ஆளுநரை விமர்சித்து பேசுவது கண்டிக்கதக்கது . சனாதான தர்மம் என்பது இந்து மதம் சார்ந்தது இல்லை, அது சாதி குறித்தும் பேசவில்லை, அது ஓர் வாழ்வியல் முறை, அதில் யாரையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எங்கும் குறிப்பிடப்படவில்லை, அதுபோலவே தொழில் ரீதியிலாகவும் யாரையும் மேலானவர், கீழானவர் என குறிப்பிடவில்லை. சனாதான தர்மம் குறித்த இரு பிரதிகள் இன்று டெல்லி பாராளுமன்ற அருகாட்சியகத்தில் உள்ளது இதனை தவறாக பேசுபவர்கள் இதனை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும், 2020 மருத்துவ சேர்க்கையின் போது 58 சதவீதம் பேர் பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை என்றே எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு, நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 99 சதவீதம் பேர் பயிற்சிக்கு சென்றவர்கள் என உண்மைக்கு மாறான தகவலை தந்துள்ளது என்றும், வரும் ஜூலை 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 65 சதவீதம் பேர் வெற்றி பெற்று புதிய சாதனை படைப்பார்கள். ஆனால் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் வெற்றி பெற கூடாது என்பதற்காக, தமிழக அரசு, வழக்கமாக நீட் தேர்வு குறித்து ஆன் லைன் வாயிலாக அளிக்கும் இ பாக்ஸ் எனும் பயிற்சியினை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு நாடகம் நடத்தி வருகிறது என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார் பேட்டியின் போது அவருடன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#annamalaibjp #annamalai #dmk #neet #neetexam #இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0