• முகப்பு
  • district
  • சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் RTO ஆலோசனைக் கூட்டம்.

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் RTO ஆலோசனைக் கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பரங்கிப்பேட்டை போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் RTO கு. அருணாச்சலம் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சிதம்பரம் கிளை மேலாளர், கும்பகோணம் கோட்டம் சிதம்பரம் கிளை மேலாளர், கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பரங்கிப்பேட்டையில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்சினை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு, அதற்கு முன்னெடுப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. தனியார் பேருந்துகள் அனைத்திலும் பரங்கிப்பேட்டை பர்மிட் வாங்கிய அனைத்து பேருந்துகளிலும் "வழி பரங்கிப்பேட்டை" என்று குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், "தங்கள் அமைப்பின் சார்பாகவே அனைத்து பேருந்துகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும்" என்று வாக்குறுதி தந்தனர். கடலூர், திண்டிவனம், புதுச்சேரி, சிதம்பரம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பேருந்து நிறுத்தங்களில் இது பரங்கிப்பேட்டை செல்லும் என நடத்துனர்கள், ஓட்டுனர்கள் அறிவிப்பு செய்வார்கள் என்ற வாக்குறுதியையும் தந்தனர். பரங்கிப்பேட்டை செல்லக்கூடிய பயணிகளை தரக்குறைவாக நடத்த விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர். நகரப் பேருந்துகளை பொருத்தவரையில் பரங்கிப்பேட்டைக்கு இயக்கப்படும் கூடிய அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும், நெரிசல் மிகுந்த நேரங்களில் மகளிருக்கு தனி பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படும், பரங்கிப்பேட்டைக்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படாமல் இயக்கப்படும் என்றும், நகரப் பேருந்துகள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் சிதம்பரம் கிளை மேலாளர் உறுதி அளித்தார். நகர்ப்புற பேருந்துகளை பொறுத்தவரையில் ஏற்கனவே பரங்கிப்பேட்டையில் இயக்கப்பட்டு கொண்டிருந்த 7 வழித்தடங்கள், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசினால் ஒப்பந்தம் கையெழுத்தாகி அனுமதி வழங்கப்பட்டுள்ள கூடிய மேலும் சில வழித்தடங்கள் பரங்கிப்பேட்டைக்கு தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு கொண்டிருப்பதை கவனத்தில் கொண்டு அதையும் நடைமுறைக்கு கொண்டு வருவது உண்டான திட்டங்களை சிறிது சிறிதாக அமல்படுத்துவோம் என்றும் வாக்குறுதி தந்தார். இறுதியில் பேசிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கும் "நீங்கள் தற்பொழுது சொன்ன பிரகாரம் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லையேல் என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுப்பேன்" என்றும், பரங்கிப்பேட்டை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் பரங்கிப்பேட்டை உள்ளே செல்லாமல் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் பலகையை முட்லூர் & புதுச்சத்திரம் சந்திப்புகளில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதை நானே எனது கையால் திறந்து வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்ற உத்தரவாதத்தையும் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கத்திற்கு தந்தார். ஆக, ஒட்டுமொத்தமாக நேற்று நடந்த கூட்டம் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு தந்தது. பரங்கிப்பேட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள்; பொதுமக்கள் & வார்டு உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களுடைய கோரிக்கைகளை, ஆதங்கங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended