Author: கார்மேகம்

Category: சிறப்பு கட்டுரை

2000 ரூபாய்த் தாளை மாற்ற வரும் ஓவ்வொரு வரிடமும் ஆதார் அட்டையும் பான் அட்டையும் PAN Card வங்கியில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் அவற்றின் பிரதியை மூலத்தோடு ஓப்பிட்டு சரி பார்த்த பின் வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.

தங்கள் வங்கிக் கணக்கில் பணமாகக் கட்டுபவர்களுடைய ஜாதகம் வங்கியில் ஏற்கனவே இருக்கும் உதாரணமாக ஆதார் எண் மொபைல் எண் வீட்டு முகவரி பாண் எண் ஆகியவற்றின் விவரங்கள் வங்கியில் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (K Y C) என்கிற விதியின் படி வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

அடுத்ததாக ஓருவர் மாற்றுகிற 2000. ரூபாய்த்தாளின் கூட்டு மதிப்பு (Cumulative value ரூ. 50.000 ரத்தை தான்டினாலோ கணக்கில் செலுத்தும்  தொகையின் கூட்டு மதிப்பு ரு. 5 லட்சத்தைத் தான்டினாலோ அவர்களுடைய விவரங்கள் வருமான வரித்துறைக்கு வங்கிகளின் கணினி வழிப்பின்னல் வாயிலாகத் தானகவே  போய்ச் சேர்ந்து விடும்.

உடனே களத்தில் இறங்கும் வருமான வரித்துறையினர் பரிசீலனையில் இருக்கும் நபர்களின் கடந்த 3 வருட வருமான வரிக் கணக்கு வங்கிக்  கணக்கில் கடந்த ஓராண்டில் வந்துள்ள வரவுகளின் கூட்டுத் தொகை C yedit summation ஆகியவற்றோடு ஓப்பிட்டுப்பார்பார்கள் இவை  அனைத்தையும் மனிதர்கள் குறுக்கீடு இல்லாமல் கணினிகளே செய்து விடும்.

அதற்காகச் சிறப்புடன் செயலாற்றும் மென் பொருள் ( Software) 2017ல் வந்து விட்டது.

அவசியம் ஏற்பட்டால் மத்தியப் புலனாய்வு நிருவனத் துக்கும் ( C B I ) மத்திய நிதித்துறையின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவுக்கும் (Financiallnte lligence unit) புள்ளி விரங்கள்  அனுப்பப்பட்டுவிடும்.

ஓருவருடைய ஆண்டு வருமானத்துக்கும் வங்கிக் கணக்கில் காணப்படும் மொத்த  வரவுக்கும் அவர் 2000.ரூபாய்த் தாளைக் கொண்டு வங்கிகளில் செய்த பரிவர்த் தனைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம், லட்சக் கணக்கில் அல்லது கோடிக் கணக்கில் இருந்தால் அவர் தீவிர விசாரனை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்.

பல் முனை விசாரனைகளில் கேட்கப் படும் வினாக்களுக்கு அவருடைய பதில்கள் திருப்திகரமாக இல்லாமல் போனால் அவரிடம் இருந்து பன் மடங்கு அபராதத் தொகை அதற்கான வட்டி ஆகியவை வசூலிக்கப்படும்.

தவிரவும் அவர் கட்டிய பணம் வந்த வழிக்கான (Source fo Income) திருப்தி கரமான விளக்கம் அவர் தரவேன்டும் அவ்வாறு செய்யத் தவறினால் கருப்பு பணத்தை வெளுப்பாக்குவதற்கான தடைச்சட்டம் பாயும், இதன் விதிகளும் அச்சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள தண்டனையும் கடுமையானவை அவற்றில் இருந்து எளிதில் தப்பிக்க இயலாதவை,

கடைசியாக ஓரு வேண்டு கோள் அல்லது  எச்சரிக்கை இன்னொருவர் தரும்  2000.ரூபாய்த் தாள்களை நீங்கள் வாங்கி மாற்றவோ உங்கள் வங்கிக் கணக்கில் கட்டவோ வேண்டாம்.

அப்படிச் செய்தால் உங்களுக்கும் தன்டனை காத்திருக்கலாம் மக்களே கவனமாக செயல்படும் நேர மிது.

Tags:

#madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #2000currency #currencies #2000rupees #twothousandrupees #2thousandrupees #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0