• முகப்பு
  • அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களின் அடிமனைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் வ??

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களின் அடிமனைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் வ??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தஞ்சை மண்டல ஆலோசனைக்கூட்டம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இன்று தஞ்சை மண்டலத்தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜாஇ ஆண்டுதோறும் மே.5ம் தேதி கொண்டாடப்படும் வணிகர் தினம் மாநில மாநாடு இவ்வாண்டு திருச்சியில் கொண்டாடப்பட உள்ளது எனவும், இதில் பல லட்சம் வணிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும்> இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதில் அனைத்து இந்திய தலைவர்களும், பொதுச்செயலாளர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுபவர்கள் வணிகர்கள். அத்தகைய வணிகர்கள் நலன்காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக மாவட்டந்தோறும் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், வணிக நல வாரியத்தை அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விக்கிரமராஜா, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களின் அடிமனைகளை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகாலமாக வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளை காலிசெய்ய நெருக்கடிகளை கொடுத்துவருவது சம்மந்தமாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றார். மேலும் மத்திய அரசு ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கு கூடுதலாக விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை கைவிட்டுவிட்டு முன்பு இருந்ததுபோல் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை தொடர்வதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended