• முகப்பு
  • இலங்கை
  • மாநகர சபை விதி முறைகளை மீறிய கோழியிறைச்சிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை.

மாநகர சபை விதி முறைகளை மீறிய கோழியிறைச்சிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை.

கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

UPDATED: May 30, 2023, 4:46:54 PM

கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள கோழியிறைச்சிக் கடைகளில் அன்றாடம் சேர்கின்ற கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (30) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் நிதி உதவியாளர் திருமதி சசிகலா யோகராஜா, சுகாதாரப் பிரிவு பொறுப்பதிகாரி யூ.எம்.இஸ்ஹாக், வருமானப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.பாஸித், வருமானப் பிரிவு உத்தியோகத்தர் நாகரட்ணம் மற்றும் வருமானப் பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.குணரட்னம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா உட்பட கோழியிறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended