திருநெல்வேலி மாவட்டம் உவரி கோவிலில் இடையூறாக இருந்த கம்பி அகற்றம்.

முகேஷ்

UPDATED: May 31, 2023, 8:01:27 PM

திருநெல்வேலி மாவட்டம் = உவரி ஸ்ரீ அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் முடிந்த சித்திரை மாதம் கடைசி வெள்ளிகிழமை அன்று சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது.

அதை உடனடியாக அகற்றுவதற்கு முயற்சி எடுத்து முதல் குரலாக அன்று திருக்கோவிலிலிருந்து முன்னாள் ராணுவ வீரர் ஐயப்பன் குரல் கொடுத்தார். தொடர்ந்து நம் தலைவர்கள் அவரோடு இணைந்து தோளோடு தோளாக தோள் கொடுத்தும் குரல் கொடுத்தும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று உயர்திரு.M.R.#காந்தி MLA அவர்களுடன் ஐயப்பன் Ex Indian Army ரூபின், ஐயப்பன், சந்திரசேகர், ஆகியோர்கள் நேரடியாக ஆலயத்திற்கு சென்றனர்.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை அகற்றுவதற்கு தொடர்ந்து எடுத்து வந்த முயற்சியின் பலனாக...

வைகாசி விசாகத் திருவிழா நடைபெற இருப்பதால் பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இடையூறாக இருப்பதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேரடியாகவே அந்த சுயம்புலிங்கமே ஆலயத்திற்கு வந்தது போல திருநெல்வேலி மாவட்ட (S.P) காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்கள் மற்றும் (DSP) யோகேஷ்குமார், தாசில்தார் காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் நேரடியாக ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தனர்.

காவல் கண்காணிப்பாளர் (S.P) சிலம்பரசன் அவர்களிடம் முழு விவரத்தையும் காந்தி MLA மற்றும் ஐயப்பன் Ex Indian Army ஆகியோர்கள் தெரிவித்தனர்.

திருக்கோவில் நிர்வாகத்தை வரவழைத்து உடனடியாக நேரில் திருக்கோவில் வளாகத்தை ஆய்வு செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை அகற்ற உத்தரவிட்டு உடனடியாக அகற்றினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended