• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோபிநாத்

UPDATED: May 25, 2023, 7:28:02 AM

இதனால் போலீஸாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயராம். இவரது மனைவி இந்திராதேவி(20). இவர் பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21-ம்தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் (மே 23) அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்திராதேவி மருத்துவமனையில் இருந்தபோது உயிரிழந்தார். இதை உறவினர்களுக்கு தெரிவிக்காமல், மருத்துவர்கள், செவிலியர்கள் ஐசியூ வார்டில் ஆக்சிஜன் ஏற்றியபடி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திரா தேவியின் தாய் உள்ளே சென்று பார்த்தபோது மகளின் நாக்கு வெளியே தெரிந்த நிலையில் இறந்துவிட்டதாக சந்தேகமடைந்து அங்கிருந்த மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதன்பின் அங்கு வந்து பார்த்த மருத்துவர்கள், இந்திராதேவி இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்ததால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அரசு மருத்துமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போலீஸாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரசவத்தின் போது சிகிச்சை பலனளிக்காமல் இந்திராதேவி இறந்தது குறித்து உரியமுறையில் உறவினர்களுக்கு தகவல் அளிக்காமல் இருந்தது குறித்து செவிலியர்கள் மீது புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பணியில் அஜாக்கிரதையாக இருந்த செவிலியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended