Author: ஆர்.ஜெயச்சந்திரன்

Category: மாவட்டச் செய்தி

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மதுபாரில் மது வாங்கி குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பாரின் உரிமையாளர் பழனிவேல், விற்பனையாளர் உள்ளிட்ட எட்டு பேரிடமும் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதைப்போல் மதுபான கடையின் மேற்பார்வையாளர் முருகன் விற்பனையாளர்கள் திருநாவுக்கரசு, சத்தியசீலன், பாலு ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று உடற்கூறு ஆய்வு முடிந்து உடலை ஒப்படைக்க காவல்துறையினர் முயற்சித்தனர்.

ஆனால் மரணத்திற்கு உரிய காரணம் தெரிய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக 22.5.2023 காலை வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் (பொறுப்பு) உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையடுத்து இருவரின் உடலையும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதற்குப் பிறகு உறவினர்கள் கூறுகையில், இருவரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டும்.

மதுபாருக்கு சயனைடு எப்படி வந்தது, யார் கலந்தது என விசாரனை செய்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

#Thanjavurnewstoday , #syenite #Thanjavurnewspapertoday , #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,
Comments & Conversations - 0