• முகப்பு
  • கல்வி
  • குடியாத்தத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்!

குடியாத்தத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்!

வாசுதேவன்

UPDATED: May 26, 2023, 1:54:21 PM

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார். அவரது உத்தரவுப்படி,

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் 192 தனியார் பள்ளிகளின் வாகனங்களை குடியாத்தம் சார் ஆட்சியர் வெங்கட்ராமன் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் டி.எஸ்.பி.,ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, நகர காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி மற்றும் தீயணைப்புத் துறையினர் இருந்தனர்.

சுமார் 192 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended