• முகப்பு
  • district
  • திருவாரூரில் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருவாரூரில் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் கமலாலயக்குளத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத்துறையின் சார்பில் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் கமலாலயக்குளத்தில் இன்று (14.06.2022) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொள்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார், குரூப் கமாண்டர் பிரவீன் பிரசாத் மற்றும் டீம் கமாண்டர் விவேக் ஸ்ரீவாஸ்த்து ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், நடைபெற்றது. உலகில் பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு பேரிடர்களால் அழிவுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற இயற்கை பேரிடர், நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகள் மற்றும் இதர பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்க இது போன்ற செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதனடிப்படையில், இயற்கை பேரிடர் காலங்களில் நிலநடுக்கம், புயல், வெள்ளம், கட்டிட இடிபாடுகள் மற்றும் இதர பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, 27 நபர்கள் அடங்கிய அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத்துறையினர் பங்கேற்றனர். மேலும், இம்மாதிரி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் குழுவானது மழை வெள்ளம், புயல் போன்ற காலங்களில் ஆபத்தில் மாட்டி கொண்டவர்களை, முதலுதவி மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் காப்பாற்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வது குறித்து பல்வேறு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், நவீன உபகரணங்கள் முதல் ஆபத்துக்காலத்தில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை செய்வது, ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே எவ்வாறு காத்துக்கொள்வது என்பது உள்ளிட்ட, பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக பேரிடர் காலங்களில் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொண்டு ஆபத்தில் உள்ளவர்களை மீட்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் (திருவாரூர்)சங்கீதா, (மன்னார்குடி)கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் பிரிவு வட்டாட்சியர் , அன்பழகன் தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன்

VIDEOS

RELATED NEWS

Recommended