Author: THE GREAT INDIA NEWS

Category: crime

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறைத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஷீலா தம்பதியர் மூத்தமகன் ஜீவா இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் நண்பர்களுக்கு உணவு கொடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் காவல் துறை சார்பில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை.கல்லறைத் தெருவில் தனியார்க்கு சொந்தமான கிணற்றின் அருகே ஜீவா வின் செருப்பு அவன் கழுத்தில் அணிந்து இருந்த சிலுவை டாலர் கிடந்ததை அடுத்து உத்தமபாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் துறை சம்பந்தப்பட்ட கிணற்றில் ஆய்வு மேற்க்கொள்ள உத்தமபாளையம் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்து கிணற்றில் ஆய்வு செய்தனர் தண்ணீர் அதிகம் இருந்ததால் மின் மோட்டார் உதவியுடன் சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தண்ணீர் வெளியேற்றிய போது உடல் வெளியே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து உடல் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மேலே கொண்டுவரப்பட்டது. தற்போது உடல் தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வு மேற்க்கொள்ள கொண்டு செல்லப்பட்டது. ஜீவாவின் இறப்புக்கு காரணம் என்ன என்று உத்தமபாளையம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்ட செய்தியாளர்: MP.ஜீவா

Tags:

#இன்றையசெய்திகள்தேனி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday #thenitamilnews #thenitodaynews #thenidistrictnews #teni #thenilatestnews #thenidistrict
Comments & Conversations - 0