• முகப்பு
  • aanmegam
  • செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன் பற்றிய பதிவு.

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன் பற்றிய பதிவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், கம்பீரமான அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்பவர். தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, பக்தர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். இவரது வாகனம் வெண் குதிரை ஆகும். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். ஒவ்வொரு வியாழன் கிழமைகளிலும் மாலை 5:30 முதல் 6:00 வரை `குபேர காலம்’ ஆகும். அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வம் செழிப்பாக பெருகும் என்பது ஐதீகம். மனைவி சித்திரரேகையோடு இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். நளகூபன், மணிக்ரீவன் என இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள். சிவந்தமேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான். உலகின் அத்தனைச் செல்வங்களும் குபேரனிடம் வந்த காரணம் என்ன. நேர்மையானவரிடம் தானே நிதிப்பொறுப்பை கொடுப்பார்கள். சிவபெருமானே குபேரனை செல்வத்தின் அதிபதியாக நியமித்த காரணம் என்ன.

VIDEOS

RELATED NEWS

Recommended