Author: இர்ஷாத் ரஹ்மத்துல்லா

Category: இலங்கை

புத்தளம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் புத்தளம் நீதிவான்நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதிவான்எஸ்.ஏ.எம்.சீ.சத்துரசிங்ஹவினால், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த 21 மாணவர்களும் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் புத்தளம் போலீஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும், முறைப்பாட்டாளர் தரப்பை, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது தொடர்பில் அறியக்கிடைத்தால், பிணையை இரத்துச் செய்து, வழக்கு முடிவடையும் வரையில், அவர்களை விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு, அடுத்த மாதம் 22ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews, #srilankanews , #, #agadhigal #srilankaagadhigal #இன்றையசெய்திகள்உலகம் , #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் , #இன்றையதலைப்புசெய்திகள்உலகம் , #indrayaseithigalsrilanka , #indrayaseithigal , #todaynewssrilanka , #worldnewstoday , #worldnewsinenglish , #worldnewslive , #worldnewstodayheadlines , #worldnewstoday2023 , #worldnewslatest , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv ,  #Tamilnewsdaily , #Districtnews , #indianewslive , #worldnewstamil , #worldnews , #worldnewsintamiltoday , #worldnewstodayintamil
Comments & Conversations - 0