• முகப்பு
  • india
  • மீண்டும் வட்டியை உயர்த்துகிறது ஆர்பிஐ.

மீண்டும் வட்டியை உயர்த்துகிறது ஆர்பிஐ.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு வட்டியை உயர்த்தும் என, பல ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த மே மாதம் 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென ‘ரெப்போ’ வட்டியை 0.4 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்தது.தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தை அடுத்து, ரிசர்வ் வங்கி இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மே மாதத்திலும் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், இன்னொரு முறை வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்கின்றனர், பல நிபுணர்கள். வட்டி அதிகரிப்பை மெதுவாக அமல்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சிலர்.இம்முறை கிட்டத்தட்ட 0.35 சதவீதத்திலிருந்து, 0.50 சதவீதம் வரை வட்டி உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended