• முகப்பு
  • கல்வி
  • கவிஞர் சோதுகுடி சண்முகத்திற்கு " கல்வி ரத்னா " நல்லாசிரியர் விருதினை ராமநாதபுரம் தொகுதி எம்.பி.நவாஸ்கனி வழங்கி பாராட்டினர்.

கவிஞர் சோதுகுடி சண்முகத்திற்கு " கல்வி ரத்னா " நல்லாசிரியர் விருதினை ராமநாதபுரம் தொகுதி எம்.பி.நவாஸ்கனி வழங்கி பாராட்டினர்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 15, 2023, 10:05:58 AM

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கே உம்மை அர்ப்பணி என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் பணிகளில் பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும்

பரமக்குடி, ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன் என்று அன்போடு அழைக்கப்படும் மு.சண்முகநாதனுக்கு

" கல்வி ரத்னா " நல்லாசிரியர் விருதினை ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கி பாராட்டினார்.

கவிஞர் சோதுகுடி சண்முகன் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி கிராமத்தில் முத்தழகு-நாகம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர். தந்தையின் கூலி வேலையில் வளர்ந்தவர். தொடக்க கல்வியை தன்னுடைய சொந்த ஊரான சோதுகுடி நூரியா தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலை கல்வியை புதூர் ஹாஜி.கே.கே.இபுறாஹிம் அலி மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியிலும், ஏனைய உயர் கல்விகளை அஞ்சல் வழியிலும் பயின்றவர். தற்போதும் பயின்று வருகிறார். கல்வி பயில்வதும் - சேவையுமே ஒரே இலக்காக கொண்டு செயல்படுபவர்.

கல்வி என்பது மாணாக்கர்களின் ஆளுமைப் பண்பை வளர்க்க பயன்பட வேண்டிய ஒன்று என்பதனை முன்னெடுக்கிறார்.

சிறந்த பண்பு, ஒழுக்கம், நன்நெறி, பெரியோர்களுக்கு கீழ்படிதல் போன்றவைகளே மாணாக்கர்களை உயர்த்தும் அடிப்படை காரணிகள் என்பதனை ஆழமாக தம்முடைய ஆசிரிய வழிகாட்டலில் கடை பிடிக்கின்றார்.

பள்ளி முதல்வராக பணியாற்றும் இவர் தன் சக ஆசிரிய தோழமைகளுக்கு நல்ல வழிகாட்டியாக மட்டுமே திறம்பட செயல்படுகிறார்.

தாய் அறக்கட்டளை என்பதனை நிறுவி தம்முடைய சமுதாய சேவைப் பணிகளை உலகிற்கு உயர்வாய் அர்ப்பணித்து வருகிறார்.

தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி என்ற தமிழ்க்கலை சார்ந்த சிலம்ப பள்ளியை நிறுவி அதன் மூலம் நமது தமிழ்க் கலையை வளர்த்து வருகிறார்.

எண்ணற்ற பன்முகத் திறன்களை கொண்டுள்ள இவருக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கல்வி ரத்னா நல்லாசிரியர் விருது பெற்றதற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

விரைவில் மாநில, மத்திய அரசின் விருதுகள் பெற மனதார வாழ்த்துவாக அவரிடம் கல்வி பயிலும் மாணவர்- மாணவியர்கள், பள்ளியினர், பெற்றோர்கள், கல்வி துறையினர், நகர் முக்கிய பிரமுகர்கள், அன்பர்கள் என அனைவரும் பாராட்டி மகிழ்ந்த வண்ணமாய் உள்ளனர்.

அவரின் சேவையும், பணியும் தொடர்ந்து சிறந்தோங்கிட, தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில, வெளி நாடுகளிலிருந்தும்  97917 81543 என்ற அவரது எண்ணிற்கு அழைத்து பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended