• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுமென ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்.

தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுமென ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 30, 2023, 9:10:30 AM

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

இத் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ், தாலுகா, ஆர்ம்ட் ரிசர்வ், டி.எஸ்.பி.நிலைய அலுவலர் 2023.) பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023-ந் தேதியில் குறைந்த பட்சம் 20 வயது,அதிக பட்சம் பொது போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 32 வயது வரையிலும், பட்டியல் - பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

இத் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக 01.06.2023. முதல் 30.06.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான தேர்வு கட்டணம் ரூ.500/= ஆகும்.

இப் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இவ் அலுவலகத்தின் தொலைபேசி எண் : 04567-230160 வாயிலாகவும், 78670 80168 - என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாகவோ, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended