• முகப்பு
  • tamilnadu
  • இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்திருப்பது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை - எல். முருகன்.

இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்திருப்பது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை - எல். முருகன்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சி பலப்படுத்தும் விதமாக மூன்று நாள் சுற்றுப்பயணமாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அவர் இன்று புதுச்சேரியில் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தூய்மை இந்தியா நிகழ்ச்சி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடற்கரையில் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் கடல் சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடும் வகையிலும் கடற்கரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது ஒரு முறை மட்டும் நடப்பதில்லை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பிளாஸ்டிக் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் அதற்காக பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக துணிப்பை உள்ளிட்ட மாற்றுப் பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இசைஞானி இளையராஜா ஒரு இசை மாமேதை அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார், இது அவரது திறமைக்கும் இசையின் சாதனைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்ட அவர், இளையராஜா இசையால் இந்த உலக மக்களை கட்டிப்போட்டவர் என்று புகழாரம் சூட்டினார். ராஜ்யசபா எம்பி பதவி இளையராஜாவுக்கு கிடைத்திருப்பது தமிழ் நாட்டிற்க்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை என்று புகழாரம் சூட்டினார். பேட்டியின் போது பாஜக புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன், சபாநாயகர் செல்வம், ராஜ்யசபா எம்.பி செல்வ கணபதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். பேட்டி; எல். முருகன் மத்திய இணை அமைச்சர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended