Author: குமரவேல்

Category: மாவட்டச் செய்தி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜா சையது யூசுப்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு உடல்நிலை சரியில்லாமல் போகவே வாடிக்கையாக செல்லக்கூடிய வான்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அனந்தராமனிடம் மருத்துவமனையில் சேர்த்துவிட கூறியதை அடுத்து அவரும் மனிதாபிமான அடிப்படையில் கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேற்படி இறந்து போன நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது அடக்கம் செய்வதற்கான வேலைகளில் நெல்லிக்குப்பம் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அவர் தங்கியிருந்த வீட்டை வீடியோ காட்சிகள் மூலம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் ஏட்டு குமாரசாமி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அவரது சொந்த ஊர் தெரியவந்தது.ஆனால் உறவினர்கள் யாரும் இல்லை என்பதும் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து இறந்தவர் இஸ்லாமியர் என்பதால் மத சடங்கு படி அடக்கம் செய்ய ஏதுவாக காவல் ஆய்வாளர் சீனுவாசன் உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளிடம் அடக்கம் செய்ய சமூக ஆர்வலர்கள் மூலம் கோரப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் அறிவுறுத்தலின் படி நகர துணை தலைவர் இக்பால், பொருளாளர் அப்துல் அஜீஸ், செயலாளர் பிலால், மற்றும் ஹசன் அலி, இமாம், நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், ஏட்டு குமாரசாமி, ஆட்டோ ஓட்டுனர் அனந்தராமன் ஆகியோர் முன்னிலையில் பெரிய தெரு ஜூம்மா பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#Cuddalorenews , #cuddalorenewstoday , #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0