Author: THE GREAT INDIA NEWS

Category:

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மருதப்பட்டினம் ராணுவ நகரில் கனமழை காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததுடன் அதில் பாதாள சாக்கடை கழிவுநீரும் கலப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட 21 வது வார்டில் உள்ள மருதபட்டினம் ராணுவ நகரில் கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் ராணுவ நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் மழையின் காரணமாக தேங்கியுள்ள நீருடன் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும்  கழிவு நீரும் கலப்பதால் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள்  வீட்டை விட்டு வெளியில் இறங்கி வரமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் மக்கள் கூறுகையில், எங்கள் வீடுகளை சுற்றி மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து தேங்கியுள்ளதால் வேலைக்கு செல்ல முடியவில்லை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், மழைநீர் வெளியேற கூடிய வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவது என்பது இப்பகுதியில் தொடர்கதையாகி விட்டதாகவும் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழலில் சிக்கி தவிப்பதாகவும்  தெரிவித்தனர். எனவே வடிகால்களிள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழையின் காரணமாக தேங்கி உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்த நீரை வெளியேற்ற முடியும் என அப் பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:

Comments & Conversations - 0