Author: THE GREAT INDIA NEWS

Category: india

ரயிலில்பயணியர் 'ஏசி' முதல் வகுப்பில், 70 கிலோ, 'ஏசி' இரண்டாம்வகுப்பில், 50 கிலோ, 'ஏசி' 3 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு படுக்கைவசதியில் தலா, 40 கிலோ, பொதுபெட்டியில் பயணிப்போர், 35 கிலோ வரைமட்டும் 'லக்கேஜ்' எடுத்துச்செல்ல வேண்டும். அதற்குமேல் கூடுதல் பாரம் எடுத்துசென்றால் அபராதம் விதிக்கப்படுமென ரயில்வே அறிவித்திருந்தது. இது தவிர, அதிகமான பொருட்களை எடுத்துச்செல்ல விரும்புவோர் 'பார்சல் சர்வீசில்' முன் பதிவுசெய்து எடுத்து செல்லலாம். முன் பதிவு செய்துபார்சல் எடுத்து சென்றால், அதற்குகட்டணம் குறைவு என்பதை பயணிகள் நினைவில் கொள்ளவேண்டும், என, ரயில்வே அறிவித்திருந்தது. பலப்பகுதியில் இருந்து திருப்பூருக்குவரும் பயணிகள்; குறிப்பாக, வட மாநிலத்தவர் இத்தகைய விதிமுறைகளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. திருப்பூர் வந்திறங்கும் பயணிகளை யாரும் கண்காணிப்பது இல்லை. அபராதமும் விதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான ரயில்களில் பொதுபெட்டி தற்போது இணைக்கப் பட்டுள்ளது. பொதுபெட்டியில் நீண்டதுாரம் பயணிக்கும் சிலர், ரயில்பெட்டியின் இருக்கைக்கு கீழ் மற்றும் பாத்ரூம் கதவுகளைஒட்டிய பகுதியில்ரேஷன் அரிசியை ஒளித்து, மறைத்துஎடுத்துச்செல்கின்றனர். ஒருபயணி குறைந்த பட்சம், 40 முதல், நுாறுகிலோ வரை எடுத்துசெல்வது வாடிக்கையாகஉள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0