Author: THE GREAT INDIA NEWS

Category: district

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன் , வயது 41 இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி மொத்தம் 729 மில்லி தங்கத்தில் மூன்று சென்டிமீட்டர் உயரம் மூன்று சென்டிமீட்டர் அகலம் அளவில் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார். இதில் 630 மில்லி தங்கத்தில் கருணாநிதியின் உருவத்தையும் 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு எழுத்தில் பெயரையும் செய்துள்ளார் . மேலும் சட்டைப்பையில் பச்சை நிறத்தில் பேனா செய்துள்ளார் , தமிழக முன்னாள் முதல்வரின் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வடிவமைப்பை இரண்டு நாளில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொற்கொல்லர் முத்துக்குமரன் ஏற்கனவே குறைந்த அளவு தங்கத்தில் இந்திய பாராளுமன்றம் தமிழக சட்டசபை நடராஜர் கோவில் தாஜ்மஹால் உள்பட பலவற்றை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . வேளாங்கண்ணி மாதா கோயிலையும் இவர் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உள்ளார் இவர் பல பதக்கங்களும் வாங்கி உள்ளார் மிகக் குறைந்த எடையில் தங்கத்தால் வடிவமைப்பு செய்வதில் கைவந்த கலைஞராக இவர் விளங்குகிறார்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #karunanithibirthday #karunanithi #dmkkarunanithi
Comments & Conversations - 0