• முகப்பு
  • pondichery
  • சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - தமிழிசை

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - தமிழிசை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

என்.சி.சி இயக்குநரகத்தின் கீழ் ஆண்டுதோறும் படகோட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு , இரத்த தான முகாம், கரையோர சுத்திகரிப்பு, மரம் தோட்டம், இரத்த தானம் மற்றும் கயாக்கிங் மற்றும் ஸ்கூபா போன்ற சாகச தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 35 சிறுவர்கள் மற்றும் 25 பெண்கள் பங்கேற்ற"சமுத்திர காமன்" பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பயணமானது புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்காலுக்கு சென்று மீண்டும் புதுச்சேரி காலாப்பட்டு சென்றடைகிறது இதன் பயண தூரம் 302 கிலோமீட்டர் ஆகும். புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கடல் சாகச பயணத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... கடல் சாகச பயணத்தில் 25 பெண்கள் 21 நாட்கள் கடலில் பயணம் செய்து சாகசம் மேற்கொள்வது பெருமையாக உள்ளது. மீன்பிடித் துறைமுகம் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது, உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். புதுச்சேரியில் பல்வேறு சுற்றுலா மையங்கள் இருந்தாலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி துறைமுக வளாகத்தை சுற்றுலா மையமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பொருளாதாரம் மேம்பட இன்னும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் புதுச்சேரிக்கு வருகிறார்கள் அவர்களால் புதுச்சேரி மேம்படும் பொருளாதாரம் மேம்படும் என்று தெரிவித்த அவர்.... தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பல் பற்றி இதுவரை எந்தவித கோப்புகளும் வரவில்லை அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended