தீபாவளி போனஸ் வழங்கிடு, ஏற்றுக்கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்

முத்தையா

UPDATED: Sep 26, 2023, 6:41:55 PM

டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கிடு,ஏற்றுக்கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய் என கோரி நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்களை இறக்கு கூலி உயர்வை உடனே வழங்கிடு, டாஸ்மாக் நிர்வாகமே உடனே தலையீடு டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கிடு, ஏற்றுக்கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய் ,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மற்றும் டாஸ்மார்க் சுமை பணி ஒருங்கிணைப்பு குழு, சேலம் மண்டலம் சார்பாக நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன்பு இன்று நாமக்கல் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் பி. பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இதில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended